பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்


வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகளுக்கு விரைவில் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெப்பம் காரணமாக காலை 6 மணிமுதல் 9 மணிவரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் அன்பில் மகேஷ் பேசுகையில்,


வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.


கரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காததால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதால், அவர்களிடையே மோதல்கள் ஏற்படுகிறது. மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog