தமிழகத்தில் கொளுத்தும் வெயில்.. 1-9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ்?.. விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு...!!!!!
தமிழ்நாட்டில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது.
இதனால் மாணவர்கள் நேரடி வகுப்புகளை இழந்துவந்தனர். இந்த நிலையில் சென்ற வருடம் இறுதியில் கொரோனா வைரஸ் குறைந்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் இயங்க தொடங்கியது. இதையடுத்து நேரடி முறையில் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் கட்டாயம் நேரடி முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து அதற்கான தேதியையும் அறிவித்தது.
இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளானது சென்ற ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5- 28ஆம் தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6- 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9-31ம் தேதி வரையும் நடைபெற இருகிறது.
அடுத்ததாக வரும் ஜூன் 23ம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். ஆகவே 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வாட்டிவதைத்து வருகிறது. இதன் காரணமாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் செய்து கோடை விடுமுறையை விரைவில் அறிவிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால் தற்போது தமிழ்நாடு அரசும் மாணவர்களும் நலனை கருத்தில் கொண்டு முன்னரே கோடை விடுமுறையை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment