இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை... 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்



இந்தியா முழுவதும் பல்வேறு வட்டங்களில் காலியாக உள்ள BPM/ABPM/ Dak Sevak என மொத்தம் 38,926 கிராமின் டக் சேவக் (Gramin Dak Sevak - GDS) பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்தியா போஸ்ட் (India Post)அழைப்பு விடுத்து உள்ளது.


இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் ஜூன் 05, 2022 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்வமும், தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapost.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருப்பதும், சைக்கிள் ஓட்ட தெரிந்திருப்பதும் கட்டாயம் ஆகும்.


இந்தியா போஸ்ட் Gramin Dak Sevak ஆட்சேர்ப்பு 2022:


பதவி: கிராமின் டக் சேவக் (GDS)


மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 38,926


சம்பள அளவு: மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை


2022-ஆம் ஆண்டிற்கான இந்தியா போஸ்ட் GDS ஆட்சேர்ப்பு தகுதி வரம்பு:


பள்ளி கல்வியில்10-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதற்கான சான்றிதழ் வேண்டும். மேலும் இந்த 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழானது இந்திய அரசு /மாநில அரசுகள் / இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்று பெற்றிருக்க வேண்டும். கணிதம், உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழாகவும் அது இருக்க வேண்டும்.


வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்


விண்ணப்ப கட்டணம்:


UR/OBC/EWS பிரிவை சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100


SC/ST/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை


கிரெடிட் /டெபிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் / UPI அல்லது ஏதேனும் தலைமை அஞ்சல் அலுவலகம் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம்.


எப்படி விண்ணப்பிப்பது.?


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் பதிவு செய்யும் போது அப்லோட் செய்ய வேண்டும்.


இந்தியா போஸ்ட் GDS ஆட்சேர்ப்பு 2022-ன் முக்கிய தேதிகள்:


ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான துவக்க தேதி: மே 02, 2022


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூன் 05, 2022


கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: ஜூன் 05, 2022


பணிகளுக்கு தேர்ந்தெடுக்கும் செயல்முறை:


விண்ணப்பதாரர்கள் கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவி தபால் மாஸ்டர் (ABPM) மற்றும் டக் சேவக் (Dak Sewak) ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களின் 10-ஆம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Comments

Popular posts from this blog