தமிழ்நாட்டில் ஜூன் 20-ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு




தமிழ்நாட்டில் ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஜூன் மாதம் இருபதாம் தேதி திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது ஒரு வாரம் முன்னதாகவோ பின்னராகவோ இருக்கலாம். தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு 38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தற்போது 10 ஆயிரத்து 300 க்கு மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கழிவறை உட்பட 18 ஆயிரம் கட்டிடங்கள் கட்டப்படும். கொரோனா காலத்துக்கு பின்னர் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சம் உயர்ந்து, தற்போது 53 லட்சமாக உள்ளது. அதிகபடியான ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். பேரறிவாளன் விடுதலை குறித்து அரசியல் பார்க்காமல் அனைவரும் குரல் கொடுத்துள்ளனர். ராஜூவ் காந்தி குடும்பத்தினரே அவர்களை மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பேரறிவாளன் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனது கருத்து" எனக் கூறினார்.

Comments

Popular posts from this blog