குரூப் 2 வினாக்கள் பிழையின்றி அமையுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு
குரூப் 2 வினாக்களை பிழையின்றி தயாரிக்க வேண்டுமென தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான தேர்வினை வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. சுமார் 11 லட்சம் பேர் இத்தேர்வினை எதிர்கொள்கின்றனர். ஓரிரு வினாக்கள் பெரும்பாலும் பிழைகளுடன் தயாரிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை முறையே 11 லட்சம், 22 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து எழுதுகின்றனர். ஆனால், வினாக்கள் தவறாக கேட்கப்படுவதால் 1 தேர்வர் பல லட்சம் பேருக்கு பின்னால் தள்ளப்படுகின்றார். எனவே, தேர்வாணையம் மாணவர்களின் வாழ்க்கை மற்றும் வேலை தொடர்பானது என்பதை கருத்தில் கொண்டு பிழைகள் இல்லாமல் வினாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment