மொத்தம்‌ 10,402 பணியிடங்கள். சிறப்பு ஆட்‌சேர்ப்பு முகாம்‌ மூலம் நிரப்பப்படும்.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..




ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பின்னடைவுப்‌ பணியிடங்கள்‌ சிறப்பு ஆட்‌சேர்ப்பு முகாம்‌ நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..


தமிழக அரசின் முதன்மை செயலாளர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் " 2021-2022-ஆம்‌ ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில்‌ ஆளுநர்‌ உரையில்‌, அரசுத்துறைகளில்‌ காணப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பின்னடைவுப்‌ பணியிடங்கள்‌ சிறப்பு ஆட்‌சேர்ப்பு முகாம்‌ (Special Recruitment Drive) மூலம்‌ நிரப்பப்படும்‌ என்ற அறிவிக்கப்பட்டது.


இந்த அறிவிப்பினை செயல்படுத்த, தலைமைச்‌ செயலக துறைகளிடமிருந்து

தொகுதிவாரியாக (Groupwise) உறுதிசெய்யப்பட்டு பெறப்பட்‌ட எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌, ஆதிதிராவிடருக்கு 8173 இடங்களும்‌ பழங்குடியினருக்கு 2229 இடங்களும்‌ ஆக மொத்தம்‌ 10402 கண்டறியப்பட்ட குறைவுப்‌ பணியிடங்களை (Shortfall) தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ (பணி நிபந்தனைகள்‌) சட்டம்‌ மற்றும் 2016 பிரிவு 27ன் படியும், உரிய வழிமுறைகளைப்‌ பின்பற்றியும்‌ தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளால்‌, தெரிவு முகமைகள்‌ மூலமாக நிரப்ப வேண்டும்‌ என ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை ஆணையிட்டுள்ளது.." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Comments

Popular posts from this blog