ஐடிஐ முடித்தவர்களுக்கு 10,12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு
ITI முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ITI-களில் படித்து விட்டு, மேற்படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலையில், ITI-களில் படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12-ம்
வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, 8-ம் வகுப்புக்குப் பின் ITI-களில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு
இணையான சான்றிதழும், 10-ம் வகுப்புக்கு பின் ITI சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ITI பயிலும் மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் வகையிலேயே இணை சான்று
வழங்கப்படுவதாகவும், இது அரசு வேலைவாய்ப்புக்கோ அல்லது இதர வேலைவாய்ப்புக்கோ
பொருந்தாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment