10ம் வகுப்பு கணித தேர்வு 'கசந்தது':''தியரி' பாணியில் கேள்வி; மாணவர்கள் சோகம்



திருப்பூர்:பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில் 5 மதிப்பெண் சில கேள்விகள், 'தியரி' பாணியில் கேட்கப்பட்டிருந்ததால், 'சென்டம்' எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வு நேற்று நடந்தது.


திருப்பூர் மாவட்டத்தில், 32 ஆயிரத்து, 52பேர் தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து, 56 பேர் பங்கேற்கவில்லை. கணிதத்தை பொருத்தவரை, ஒரு மதிப்பெண்,இரு மதிப்பெண் கேள்விகள் எளிதாகவும். ஐந்து மதிப்பெண் கேள்விகள் சில, 'தீர்வு' காணும்படி இல்லாமல், 'தியரி' அடிப்படையிலே கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog