10-ம் வகுப்பு கணிதத் தேர்வு கடினம்
10-ம் வகுப்பு கணிதப் பாடத்தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ''கணித வினாத்தாள் எதிர்பார்ப்புக்கு மாறாக கடினமாக அமைந்துவிட்டது. ஒரு மதிப்பெண் வினாவில் 2 கேள்விகள் நுண்ணறிவு சார்ந்தவையாக இருந்தன. அதேபோல், 2, 5 மதிப்பெண் வினாக்களும் மாணவர்கள் நன்கு சிந்தித்து பதிலளிக்கும் வகையில் இருந்ததால் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
இதுதவிர எண் 28 மற்றும் 42 கட்டாய வினாக்கள் கடினமாக இருந்தன. வரைபடம் மற்றும் வடிவியல் பகுதிகளின் கேள்விகள் மட்டும் சற்று எளிதாக இருந்தன. இதனால் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்'' என்றனர்.
Comments
Post a Comment