தமிழகத்தில் 1.18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை - பள்ளி கல்வித்துறை தெரிவிப்பு!
தமிழகத்தில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 26 புள்ளி 77 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1 புள்ளி 18 லட்சம் பேர் பொது தேர்வை எழுதவில்லை என பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.
குழந்தை திருமணம், ITI எனப்படும் பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்துவிடுவது, கொரோனாவால் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியே பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதனிடையே நடப்பு கல்வியாண்டில் இடைநின்ற 1 புள்ளி 80 லட்சம் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் 1 புள்ளி 18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, இடைநிற்றலை குறைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
Comments
Post a Comment