பள்ளி மேலாண்மைக் குழு - பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு!!




பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினர்கள் நியமனத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பள்ளி மேலாண்மைக் குழு என்பது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகக் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-இன்படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும்..


அரசுப் பள்ளிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகளையும் நிர்வகிக்கக்கூடிய பொறுப்பைப் பெரும்பான்மையாகப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் , கல்வி ஆர்வலர் என்ற அடிப்படையில் மொத்தம் 20 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைத்திருக்கிறது. இந்த கல்வி உரிமைச் சட்டம் (RTE), 2009-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2010-ல் நடைமுறைக்கு வந்தது.


இந்நிலையில் பள்ளியின் இறுதி வகுப்பில் பயிலும் மாணவர்களின் பெற்றோரை, மேலாண்மைக் குழு உறுப்பினராக நியமிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் நியமனத்துக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.

Comments

Popular posts from this blog