பொதுத்தேர்வு பணிக்கு இவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்..! வெளியான பரபரப்பு உத்தரவு..!




பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது என்று தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.


10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கு புதிய வழிகாட்டுதல்களை தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், வினாத்தாள் மையங்களில் காவலர் பணியில் இருக்க வேண்டும் என்றும், இரட்டை பூட்டுக் கொண்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் விதிகளுக்கு புறம்பாக தேர்வுப்பணியில் அலுவலர்களை நியமிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது. தேர்வறை கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் ஆசிரியர்கள், அன்றைய பாடத்துக்கான ஆசிரியராக இருக்கக் கூடாது. அரசுப்பள்ளி ஆசிரியர்களையே தேர்வுப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog