நீட் தேர்வு எழுதுவதற்கான நேரத்தை அதிகரித்தது தேசிய தேர்வு முகமை!
நீட் தேர்வு எழுதுவதற்கான நேரத்தை தேசிய தேர்வு முகமை அதிகரித்துள்ளது. இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது.
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரமாகும்.
இந்த தேர்வு எழுதுவதற்கான நேரத்தை தேசிய தேர்வு முகமை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 3 மணி நேர கால நிர்ணயத்தில் எழுதி முடிக்கப்பட வேண்டிய நீட் தேர்வு இனி 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது.
அதாவது 3 மணி நேரம் 20 நிமிடங்கள் தேர்வை எழுதலாம். அதாவது 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் அசாமி, பெங்காலி, ஆங்கிலம். குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. தவறான கேள்விகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விடைகளுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இடஒதுக்கீடு பெறும் பிரிவை சேர்ந்த 30 வயதிற்குள் மூன்று முறையும் மற்றவர்கள் 25 வயதிற்குள் மூன்று முறையும் இந்த தேர்வை எழுத முடியும்.
Comments
Post a Comment