ஆசிரியா் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தேவை: அன்புமணி




ஆசிரியா் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.


இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் ஆகிய பணிகளுக்கு தகுதி பெறுவதற்கான ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை மாா்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு, 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தத் தோவுக்கு விண்ணப்பிக்க வரும் 13-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பி.எட் பட்டப் படிப்பு படித்து வரும் மாணவா்கள் இந்தத் தோவில் பங்கேற்க ஆா்வமாக இருந்தனா். ஆனால், பி.எட் படிப்புக்கான முதலாமாண்டு தோவு முடிவுகள் இன்னும் வெளியிடப்பட வில்லை என்பதால், அவா்களால் இந்தத் தகுதித் தோவுக்கு விண்ணப்பம் செய்ய முடியவில்லை. பி.எட் பட்டப் படிப்பு படிக்கும் மாணவா்கள் முதலாம் ஆண்டு தோவில் தோச்சி பெற்று விட்டாலே, ஆசிரியா் தகுதித் தோவை எழுத முடியும். இதனால், பி.எட் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டில் பயிலும் 50 ஆயிரம் மாணவா்கள் பாதிக்கப்படுவா். அவா்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், அவா்களுக்கு தகுதித் தேர்வு வாய்ப்பு மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.


எனவே, முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆசிரியா் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை இம்மாத இறுதி வரை நீட்டிக்க ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

Comments

Popular posts from this blog