இன்று டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு வெளியாகிறது!!




தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் டி.என்.பி.எஸ். சி ., யின் தேர்வு முறை மாற்றங்கள் குறித்து , முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.


அரசு துறை அலுவலர் மற்றும் ஊழியர்கள், டி.என்.பி.எஸ்.சி., வழியாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வாணையத்தின் பணி நியமன நடவடிக்கைகள், அரசின் கொள்கை முடிவுகளின்படி, அவ்வப்போது மாற்றப்படும்.


அதன்படி, சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு நடைமுறை மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்க, இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.


மேலும், பிற மதங்களில் இருந்து மாறுவோருக்கு, பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு உண்டா, முதல் தலைமுறையாக இஸ்லாமியராக மாறியவர்களுக்கு, இட ஒதுக்கீடு உண்டா என்பது குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.


ஆணைய தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், தேர்வாணைய உறுப்பினர்கள் ஆறு பேர், டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Comments

Popular posts from this blog