எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 10 நாட்கள் கால அவகாசம்



தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, மேலும் 10 நாட்கள் கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடுசீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழக காவல் துறையில் 444 உதவி ஆய்வாளர்களுக்கான காலி பணியிடம் அறிவிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டுக்கான உதவி ஆய்வாளர் தேர்வு வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, ஏற்கெனவே காவல் துறையில் பணிபுரிந்து வரும் தகுதியுடைய காவலர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதி உள்ள ஆயிரக்கணக்கான காவலர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்து வருகின்றனர். உதவி ஆய்வாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பதவிக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும்.


இந்நிலையில், காவல்துறையில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கும் போது, தங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்றுதான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் நூற்றுக்கணக்கான காவலர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் கிடைக்கவில்லை. தடையில்லாச் சான்றிதழ் பெற்றவர்களும், சர்வர் பிரச்சனையால் விண்ணப்பிக்க இயலாத நிலையில் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி இன்றுடன் முடியவிருந்த நிலையில், வரும் 17-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog