விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்கியது
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்கியது.விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும், தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்கியது.பயிற்சியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பாலமுருகன் துவக்கி வைத்து, தேர்வுக்கு தயாராகும் வழிமுறை பற்றி பேசினார்.
முன்னாள் மாணவர்கள் தனசேகர், திவ்யா ஆகியோர் பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.முதல் நாள் நடந்த பயிற்சியில் 137 பேர் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பு வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும்.
Comments
Post a Comment