டெட் தேர்வுக்கு புதிய பாடத் திட்டம் வெளியீடு



ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) புதிய பாடத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.


நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 13-ல் நிறைவடைந்தது. கடைசி இரு நாட்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இணையதளம் முடங்கியதால், பெரும்பாலான பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.


இந்நிலையில், டெட் தேர்வுக்கான புதிய பாடத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. முதல் தாள், 2-ம் தாள் என இரு பிரிவுகளுக்கும் திருத்தப்பட்ட பாடத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பட்டதாரிகள் www.trb.tn.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


இந்த புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். அதற்கேற்ப தேர்வர்கள் தயாராக வேண்டும். காலஅவகாசம் குறைவாக உள்ளதால், விண்ணப்பப் பதிவை நீட்டிக்க வாய்ப்புகள் இல்லை என்று டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog