தமிழ்நாட்டில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பு: தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்ப தாக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித் துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி வரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவல கங்களில் பதிவு செய்துள் ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட் டுள்ளது.
அதன்படி, வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக் காக 76,24,726 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் ஆண்கள் 35,63,672 பேர். பெண்கள் 40,60,817 பேர் பெண்கள். 237 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
பதிவு செய்துள்ளவர் களில், 18 வயதுக்கு உட் பட்ட பள்ளி மாண வர்கள் 16,73,803 பேரும், 19 முதல் 23 வயது வரை யுள்ள உள்ள கல்லூரி மாண வர்கள் 17,32,820 பேரும், 24 முதல் 35 வயது வரையுள் ளவர்கள் 28,82,193 பேரும் உள் ளனர்.
அதுபோலவே 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13,24,170 பேரும், 58 வயதிற்கு மேற்பட்ட வர்கள் 11,070 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 1,40,523 என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Comments
Post a Comment