தமிழ்நாடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % மருத்துவ உள் ஒதுக்கீடு செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழ்நாட்டில் இளங்கலை மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது எனவும், அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாகப் பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது எனவும் அதன் அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்றப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.


இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்துள்ளது.


பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதா என தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞருக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.


அடுத்த 5 ஆண்டுகள் கழித்து இந்த இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Comments

Popular posts from this blog