கடந்த 5 நாளில் 7,382 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு 1.44 லட்சம் பேர் விண்ணப்பம்! டிஎன்பி.எஸ்.சி




7,382 காலி பணி இடங்களுக்கு குரூப்-4 தேர்வை டிஎன்பிஸ்சி வெளியிட்டுள்ள நிலையில், இந்த தேர்வுக்கு 1.44 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024, ஸ்டோர் கீப்பர் 1 என 7138 இடங்கள் மற்றும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது.


இதில், குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் 30ம் தேதி வெளியிட்டது.


இதைத்தொடர்ந்து குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு வெளியிட்ட கடந்த 5 நாட்களில் மட்டுமே 1.44 லட்சம் பேர் வரை விணப்பித்துள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளனர்.


இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசியவர், நேற்று மாலை 5.25 மணி நிரவரப்படி குரூப் 4 தேர்வுக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 832 பேர் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 25 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கிறோம். இத்தேர்வுக்கு வருகிற 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூலை 24ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog