ஒருங்கிணைந்த இன்ஜினியர் பதவிக்கு ஜூன் 26ம் தேதி எழுத்து தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு



டிஎன்பிஎஸ்சி தமிழக அரசின் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள ஆட்டோ மொபைல் இன்ஜினியர் 4 இடங்கள், மின்துறையில் ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் 8 இடம், வேளாண்மை துறை உதவி இன்ஜினியர்-66 இடங்கள், நெடுஞ்சாலை துறை உதவி இன்ஜினியர்-33, தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உதவி இயக்குனர்-18, பொதுப்பணித்துறையில் உதவி இன்ஜினியர் 309 இடங்கள், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு மையத்தில் போர்மேன் 7 இடங்கள், டெக்கினிக்கல் அசிஸ்டெண்ட் 11, தமிழ்நாடு பஞ்சாயத்து மேம்பாட்டு சேவை துறையில் உதவி இன்ஜினியர் 92 இடங்கள் என 549 இடங்கள் நிரப்பப்படுகிறது.


மேலும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவி இன்ஜினியர் 64 இடங்கள், மெட்ராஸ் மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி ஆணையத்தில் உதவி இன்ஜினியரில் 13 இடங்கள் என 77 நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து டிஎன்பிஎஸ்சி ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடங்கியது. தேர்வுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு ஜூன் 26ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு(டிகிரி தரம்) நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது என்று டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog