தமிழகம் முழுவதும் 220 பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய சிக்கல்!! கலக்கத்தில் மாணவர்கள்!!




இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்ப குழு ஆய்வு செய்து வருகிறது. அதன்படி 2022-23ம் ஆண்டுக்கான ஆய்வு வழிகாட்டுதல்களை AICTE வெளியிட்டுள்ளது.


அதில் 2022-23 கல்வியாண்டில் தமிழகத்தில் 220 பொறியியல் கல்லூரிகளில் புதிய பாட பிரிவுகளை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது.


நடப்பு கல்வியாண்டில் 50% க்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 400 பொறியியல் கல்லூரிகளில் 2021-22-ம் கல்வியாண்டில் 220 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 50%க்கும் குறைவாகவே உள்ளது.


Artificial intelligence, Cyber security, Data science, Machine learning உட்பட வளர்ந்து வரும் புதிய பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் mechanical, civil போன்ற பாரம்பரிய பிரிவுகளை மட்டும் கொண்டு செயல்படும் 220 பொறியியல் கல்லூரிகளை மூடும் அபாயம் உருவாகியுள்ளது, தமிழகத்தில் ஏற்கனவே சுமார் 100 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

Popular posts from this blog