TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு.! 'குரூப் 4' தேர்வு எப்போது தெரியுமா..? இன்று வெளியாகிறது அறிவிப்பு..!!
இன்று வெளியாகிறது குரூப் 4 அறிவிப்பு :
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த வருடம் வெளியான வருடாந்திர தேர்வு கால அட்டவணை மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு முன்கூட்டியே தயார்படுத்தி வருகின்றனர். மேலும் இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் ஒன்று ஒன்றாக வெளியாகி இருக்கிறது.
குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் பல லட்சம் போட்டி தேர்வுகள் விண்ணப்பிப்பதில் இருந்தே அரசு பணிகளுக்கு இளைஞர்களிடையே இருக்கும் மோகம் குறித்து நாம் அறிந்துகொள்ள முடியும். 5,831 காலி பணியிடங்களை கொண்ட குரூப் 2 தேர்வு மே மாதம் 21ம் நடைபெறவுள்ளது.
போட்டி தேர்வர்கள் மகிழ்ச்சி :
இதற்கு டிகிரி படிப்பு முக்கியம் என்பதால் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்தவர்களின் குறிக்கோளாக குரூப் 4 தேர்வு உள்ளது. இதற்கான தகுதி 10ம் வகுப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் 4 தேர்வு தொடர்பான காலி பணியிடங்கள், தேர்வு தேதி ஆகியவை இன்று அறிவிக்கப்படவுள்ளது.
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் 9 ஆயிரத்து சொச்சம் பதவிகளுக்கு குரூப் 4 (Group 4) தேர்வு நடைபெற்றது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் தேர்வு நடைபெறவில்லை. நாளை தேர்வு அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், இம்முறையும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என்பது தேர்வர்களின் எண்ணமாக உள்ளது. இதனால் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment