TN TRB விரிவுரையாளர் தேர்வர்களே.. அனுபவ சான்றிதழ் ஒப்புதல் அளிக்கும் மையங்கள்.. மிக முக்கிய அறிவிப்பு...!!!!!!





அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாகவுள்ள 1,060 விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்துள்ளது.


இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வருகிற 18 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்ச்சியடைந்த தேர்வர்கள் தங்களுக்கான ஆசிரியர் அனுபவ சான்றிதழில் தொழில்நுட்ப கல்வி கமிஷனரின் மேலொப்பம் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் சென்னைக்கு வருவதை தவிர்க்கும் அடிப்படையில் மாவட்ட அளவில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தொழில்நுட்பகல்வி இயக்குனரக கமிஷனர் லட்சுமிபிரியா அறிவித்தார்.


அந்த வகையில் சென்னை மத்திய பாலிடெக்னிக், புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், செங்கல்பட்டு ராதாகிருஷ்ணன் நகர் அரசு பாலிடெக்னிக், காஞ்சிபுரம் செய்யாறு அரசு பாலிடெக்னிக், கோவை அரசு பாலிடெக்னிக் உட்பட 44 பாலிடெக்னிக்குகளில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு சான்றிதழில் மேலொப்பம் பெற தேர்வர்கள் எடுத்து செல்ல வேண்டிய சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் மேலொப்பம் வழங்கப்படும் மையங்கள் குறித்த முழு விபரங்களை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இதற்கிடையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் இணையதளத்தில் சர்வர் வேகம் குறைவாக இருப்பதால் புகார் எழுந்துள்ளது. இதனால் விண்ணப்பத்தில் தவறுதலாக எம்.பில். பதிவை தேர்வு செய்தவர்களுக்கும் விண்ணப்பம் பதிவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த சந்தேகம் தீர்க்கும் தொலைபேசி எண்களை தேர்வர்கள் தொடர்பு கொண்டால் எப்போதும் பிசியாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

Comments

Popular posts from this blog