Group 4 Exam Pattern: 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள்; குறைந்தபட்சம் 90 மார்க்.. குரூப் 4 தேர்வு முறை எப்படி?




மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்படும்.


மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.


முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சமாகத் தேர்வர்கள் பெற வேண்டும்.


அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். நவம்பர் மாதத்தில் நேர்காணல் நடத்தப்படும்.


தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை


ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும். டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.

Comments

Popular posts from this blog