மோட்டார் வாகன ஆய்வாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் வழக்கு ரத்து




தமிழ்நாடு மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான தேர்வில், அனைத்து விண்ணப்பதாரர்களின் எழுத்துத் தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், 226 பேர் நேர்முகத்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பட்டியலை எதிர்த்தும், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை வெளியிடக் கோரியும் 54 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எழுத்துத்தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களின் முடிவுகளையும் வெளியிட்டு, அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியலை தயாரிக்க வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாத விண்ணப்பதாரர்கள் தவிர, மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கடந்தாண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.


இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேல் முறையீட்டு செய்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பிலிருந்து, தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், நியாயமாக நடப்பதை உறுதி செய்யவே முடிவுகளை வெளியிடும்படி தனி நீதிபதி உத்தரவிட்டார்.


பிரதான வழக்கை விரைந்து முடிக்கும்படி தனி நீதிபதிக்கு உத்தரவிடுவதாக இருந்தால், இடைக்கால உத்தரவை ரத்து செய்ய எந்த ஆட்சேபமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்பு தெரிவித்தது.


இதையடுத்து நீதிபதிகள், அனைத்து விண்ணப்பதாரர்களின் முடிவுகளையும் வெளியிட வேண்டும் என்ற தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பிரதான வழக்கை விரைந்து விசாரிக்கும் வகையில், அனைத்து வழக்குகளையும், தனி நீதிபதி முன் மார்ச் 31ஆம் தேதி தேர்வாணையம் பட்டியலிட வேண்டும் என்

Comments

Popular posts from this blog