தட்டச்சு தேர்வு முறையில் புதிய மாற்றம்.. மாணவ-மாணவிகள் கடும் அவதி..!!!!
தட்டச்சு தேர்வு முறையில் அரசு சில மாற்றங்கள் செய்துள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்ப இயக்குனரகம் தட்டச்சுத் தேர்வை நடத்துகிறது..
இந்த தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கணினி வழி தேர்விலும் வெற்றி பெற்ற பிறகு அரசு நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வில் கலந்து கொள்ள முடியும். இந்த தட்டச்சு தேர்வில் அரசு சில மாற்றங்களை செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூரில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முதலில் வேக தட்டச்சு முறையும், இரண்டாவதாக கடிதம் மற்றும் ஸ்டேட்மெண்ட் எழுதும் முறையும் வழக்கத்தில் இருந்தது. ஆனால் தற்போது நடந்த தேர்வில் முதலில் ஸ்டேட்மெண்ட் மற்றும் கடிதம் எழுதுதல் இருந்தது. இதன் காரணமாக உரிய நேரத்தில் மாணவர்கள் தேர்வை எழுத முடியவில்லை. எனவே பழைய தட்டச்சு முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென மாணவ-மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment