தேர்வர்கள் கவனத்திற்கு.. குரூப்-4 தேர்வு: TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!!




குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.


அண்மையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்து இருந்தது. அதன் மூலமாக பல்வேறு பட்டதாரிகள் பயனடைந்து கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர்.


 இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, குரூப் 2 தேர்வுக்கு Syllabus தயாரிப்பு பணி ஓரிரு நாட்களில் முடிவு பெறும். அதன்பின் இம்மாதத்தின் இடையில் குரூப்-4 தேர்வுக்கான அட்டவணையை வெளியிடுவதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


அதனை தொடர்ந்து தற்போது அறிவிக்கவுள்ள குரூப்-4 தேர்வில் 5000 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், கலந்தாய்வு முடிவு பெறும்வரை பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை அதிகமாகி வருகிறது என்று கூறியுள்ளார். 


குருப் 4 தேர்வு மூலம் 5000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத் தாள் மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லக்கூடிய வாகனங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அந்த வினாத்தாள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பில்லை எனவும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog