வினாத்தாள் லீக் விவகாரம்.. இனி இப்படிதான்.. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி ப்ளான்...!!!!!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் "லீக்" ஆகாமல் தடுப்பதற்கு 3வகை வினாத்தாள்கள் தயாரிக்க பள்ளிக்கல்விதுறை முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. அப்போது பல்வேறு பாடங்களுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே "லீக்" ஆனது. தற்போது 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு வரும் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 முடிவடைய இருக்கிறது.
இத்தேர்வில் வினாத்தாள்கள் லீக் ஆகாமல் தடுக்க பள்ளிக்கல்விதுறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது 3 விதமான வினாத்தாள்களை தயாரித்து கடைசி நேரத்தில் எந்த வினாத்தாளை வழங்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒருவேளை ஒரு வினாத்தாள் லீக் ஆனால், மாற்று வினாத்தாளை தேர்வில் வழங்க முடிவு செய்துள்ளனர். அதே நேரம் 3 வகை வினாத்தாள்களும் ஒரே நேரத்தில் வெளியாகாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment