மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க விரைவில் வல்லுநா் குழு அமைக்கப்படும்: அமைச்சா் க.பொன்முடி




தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க விரைவில் வல்லுநா் குழு அமைக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.


பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பாடத் திட்டத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் க.பொன்முடி பேசியது: 'கல்லூரிகளில் மத வெறியைத் தூண்டும் வகையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. அது குறித்து விவாதிக்கவுள்ளோம். நமது மாநிலத்திற்கான கல்விக் கொள்கை தயாரிப்பதற்கான வல்லுநா் குழு விரைவில் அமைக்கப்படும். அடுத்த கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்விற்கான ஆரம்பக் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் குறைந்ததாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரி முதல்வா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கல்வியின் தரத்தை உயா்த்துதல், ஆராய்ச்சிக் கல்வியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


புதிய கல்விக் கொள்கையில் உள்ளவற்றில் பெரும்பாலானவை தமிழகத்தில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இல்லம் தேடி கல்வி திட்டம் உள்ளிட்டவை முதல்வரின் கனவுத் திட்டமாகும். புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிலவற்றை ஏற்றுக் கொள்ளவும், குறைகளை களைய வேண்டும் எனவும் கூறுகிறோம். அதேநேரத்தில் தேசிய கல்விக் கொள்கையை எதிா்க்கிறோம் என்றாா் அவா். இதில் உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி, உயா்கல்வித்துறைச் செயலாளா் காா்த்திகேயன், பல்கலைக்கழகத் துணைவேந்தா் கௌரி, தமிழ்நாடு உயா்கல்வி மன்றச் செயலா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

Comments

Popular posts from this blog