சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என யு.ஜி.சி வெளியிட்ட அறிவிப்பு..!!!!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என யு.ஜி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது யு.ஜி.சியின் அங்கீகாரம் பெறாமல் கல்வி நிறுவனங்கள் எந்த ஒரு படிப்பையும் நடத்த அனுமதி கிடையாது. கடந்த 2014 முதல் 2015-ம் ஆண்டு வரை மட்டுமே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்விக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்பிறகு தொலைதூர படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மேலும் அங்கீகாரம் பெறாமல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் செல்லாது. இதனால் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காது. மேலும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முழு பொறுப்பு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மட்டுமே என்றும் யு.ஜி.சி தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment