சான்றிதழ் பதிவேற்றுவதில் சிக்கல்: டி.ஆர்.பி., தேர்வர்கள் பரிதவிப்பு
;டி.ஆர்.பி., இணையதளத்தில் உள்ள சிக்கல்களால், அனுபவ சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாத சூழல் எழுந்துள்ளதாக, தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
2021 டிச., மாதம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், விரிவுரையாளர்களாக பணியில் சேர தேர்வுகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு; தகுதி சான்றிதழ் அனைத்தும் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலஅவகாசம் இன்றுடன் நிறைவுபெறுகிறது.இச்சூழலில், தேர்வர்கள் பலர் அனுபவ சான்றிதழ் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை தொடர்வதாக, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தேர்வர் சங்கர் கூறுகையில், ''அனுபவ சான்றிதழ் பெற கல்லுாரிகளில் லஞ்சம் கேட்கின்றனர். சில கல்லுாரிகள் அனுபவச்சான்றிதழ் தர மறுக்கின்றனர்.
இத்தேர்வு நடைமுறையின் படி, பணி அனுபவம் உள்ளவர்களுக்கு இரண்டு மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படும். அதற்கு, இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். நான் பணிபுரியும் கல்லுாரியில் சான்றிதழ் வழங்க பணம் கேட்பதால், அந்த இரண்டு மதிப்பெண் வேண்டாம் என கருதி விண்ணப்பிக்க முயற்சி செய்தேன். அனுபவம் உள்ளதா என்ற கேள்விக்கு, 'ஆம் 'என்று பதில் அளித்தால் சான்றிதழ் பதிவேற்றம் செய்தால் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும் என வருகிறது.
சரி, அனுபவம் 'இல்லை' என குறிப்பிட்டு சமர்ப்பிக்க முயற்சித்தால், 2017, 2019ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டதேர்வுக்கு அனுபவம் உள்ளது என்று பதிவு செய்ததைசுட்டிகாட்டி, விண்ணப்பத்தை ஏற்க மறுக்கிறது. உரிய தகுதியிருந்தும் விண்ணப்பிக்க முடியாத நிலை தொடர்கிறது. இதற்கு டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுப்பதுடன்; அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்,'' என்றார்.
Comments
Post a Comment