பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் ஆசிரியர்கள் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் ஆசிரியர்கள் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை குறித்து மண்டல ஆய்வுக் கூட்டம் சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 2013-ஆம் ஆண்டில் இருந்து 80 ஆயிரம் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்சி பெற்றுள்ளதாக கூறினார்.
ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன என்றும் அதை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறினார். பொருளாதாரத்தில் பின் தங்கிய 44 வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் பணிக்கு வருவதற்கு ஆசிரியர்களிடையே தயக்கம் நிலவுவதாகவும் அன்பில் மகேஸ் சுட்டிக்காட்டினார்.
Comments
Post a Comment