பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் அனுபவ சான்றிதழ் பெறும் வசதி
தமிழ்நாட்டிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்புப் பயிலகங்களில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிக்கு அனுபவ சான்றிதழ்களைப் பெறுவதற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்களுக்கு சிறப்புப் பயிலகங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிக்கு அனுபவ சான்றிதழ்களைப் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி ஆணையர் லட்சுமிபிரியா (மார்ச் 15) வெளியிட்டுள்ள உத்தரவில், 'அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களின் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், அரசு, அரசு நிதி உதவி பெறும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்த, பணிபுரியும் விண்ணப்பதாரர்களின் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் பணிபுரிந்ததற்கான அனுபவச் சான்றிதழில் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மண்டல அலுவலர்
எனவே, விண்ணப்பதாரர்கள் அனைவரும் சென்னைக்கு வந்து மேலொப்பம் பெறுவதைத் தவிர்க்கும் பொருட்டு, விண்ணப்பதாரர்களின் வசதிக்காகத் தொழில் நுட்பக் கல்வி ஆணையரின் சார்பாக அனுபவச் சான்றிதழ் மேலொப்பம் செய்வதற்குத் தமிழ்நாட்டில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல்வர், முதல்வர் பொறுப்பாளர்களை மண்டல நோடல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் அலுவலக நாட்களில் சம்பந்தப்பட்ட அலுவலகம், கல்லூரிக்குச் சென்று அனுபவச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்' என அதில் கூறியுள்ளார்.
Comments
Post a Comment