அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை
தொண்டி அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளது.தொண்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் (மேற்கு) போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து இப் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அகமதுபாய்ஸ் கூறியதாவது- 255 மாணவ, மாணவிகள் படிக்கும் இப் பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் மட்டும் பணியில் உள்ளனர்.இதே போல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமைஆசிரியர் உட்பட கணினி மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.
இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Comments
Post a Comment