டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு எழுதுபவர்களுக்கு.வெளியான எச்சரிக்கை அறிவிப்பு...!!!!!!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்ததால் அண்மையில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்திருந்தது.
அதன் வாயிலாக பல்வேறு பட்டதாரிகள் பயனடைந்து கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது குரூப்-4 அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற விழுப்புரம் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து 2021-2022 ஆம் வருடத்துக்கான கண்காட்சி, கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் பங்கேற்று அரசு போட்டித் தேர்வுக்கான புத்தக கண்காட்சியை ஆரம்பித்து வைத்து, அதில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.
அதன்பின் மாணவர்கள் மத்தியில் ஏடி எஸ்.பி தேவநாதன் பேசியபோது, டிஎன்பிஎஸ்சி தொடர்பான தகவலையும் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் நாம் என்னவாக போகிறோமோ, அது குறித்த முழு விபரங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். இதற்கிடையில் காவலர் பணி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்ற எண்ணம் ஒருபோதும் மாணவர்கள் மத்தியில் எழகூடாது.
தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்தையும் கண்காணிப்பதாகவும், லஞ்சம் கொடுத்து அரசு பணியை வழங்க இயலாது என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அதற்கான பயிற்சியை எடுத்துகொள்ள வேண்டும் என்றும் ஏடிஎஸ்பி தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment