பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 36,895.89 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்
தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பேரவையில் பேசிய அவர்,
தமிழக பட்ஜெட்டில் 36,895.89 கோடி ரூபாய் பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்படுகிறது. இதனால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்பம், கலை, மருத்துவம் துறையில் மேம்பட, பின்தங்கிய 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும். மேலும் 15 மாவட்டங்களில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும், இதற்காக ரூ. 125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அரசு பள்ளிகளை மேம்படுத்த 'பேராசிரியர் அன்பழகன் திட்டம்' செயல்படுத்தப்படும்.
ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி வகுப்புகள் என பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1, 300 கோடி செலவு செய்யப்படும்.
அரசின் உதவி பெறாத, தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.' என்றார்
Comments
Post a Comment