டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ். தமிழ்வழி சான்றிதழ் கட்டாயம். தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு.!!!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு துறை காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் குரூப் 2, குரூப் 2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி மார்ச் 23ஆம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மே 26-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தற்போது ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி, தேர்வு முறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெறுவது அவசியமாகும். மேலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது. அதனால் தமிழ் தேர்வு தமிழ் வழியில் பயின்று அவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது வழிக்கல்வி கற்றதற்கான சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனால் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களில் அதற்கான சான்று பெற்ற பின்னரே விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களும் தமிழ்வழி சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அரசு உடனடியாக இதில் தலையிட்டு இந்த நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் களுக்கு தமிழ் தேர்வு சான்று கட்டாயமில்லை என உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment