தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு. கலந்தாய்வில் புதிய வழிமுறைகள்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!!
மார்ச் 14-ஆம் தேதி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் தொடங்கியுள்ளதால் அரசு பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. தற்போது பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகிற மார்ச் மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்விற்கான வழிமுறைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் மாவட்ட வாரியாக பெறப்பட்ட பணியாளர்கள் நிர்ணய பட்டியலில் ஏதேனும் கூடுதலான ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பதிவுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு அதில் அவர்களுக்கு தலைமையாசிரியர் பதவி கிடைத்து இருந்தால் அவர்களின் பெயர்களை நீக்கம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பாடவாரியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் உள்ள ஆசிரியர்கள் யாராவது தலைமை ஆசிரியர் பதிவுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு பதவி உயர்வு பெற்றால் அவர்களின் பெயரையும் நீக்க வேண்டும். மேலும் கூடுதல் காலிப்பணியிடங்கள் தேவைப்பட்டால் இது தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் வருகிற மார்ச் 11ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Comments
Post a Comment