செய்முறை பயிற்சி.. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!!!!



தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கடந்த 2 வருடங்களாக அதிகரித்த காரணத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன.


மேலும் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பருவத்தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புக்கள் நடைபெற்றன. மேலும் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு கால அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி வெளியிட்டது.


இந்த அறிவிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாவது, 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2-ம் தேதி முடிவடைய உள்ளது. அதேபோல் பொது தேர்வும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரையும் மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரை நடத்தப்படுகிறது. மேலும் மே 6ஆம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.


எனவே இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் இறுதிக்குள் பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதனை தொடர்ந்து அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க மாவட்ட கல்வி அலுவலர்களை அணுகலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொது தேர்வை தனி தேர்வாக எழுத விரும்பும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog