டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு..! இனி இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்..! முக்கிய அறிவிப்பு..!



டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..


இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடும் தேர்வுகளுக்கு இனி விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ்களை பிடிஎஃப் (Pdf) வடிவில் பதிவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யும் சான்றுகளின் அடிப்படையில் தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரிபார்க்கப்படும். ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ, தேவையான ஆதார ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரரின் இணையவழி விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய நடைமுறை குறித்த விவரங்களை முழுமையாக காண https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/21_2022_PRESS%20RELEASE.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog