எழுத்துத்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!!
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை இந்த ஆண்டு நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது
அந்த வகையில் மே மாதம் 5,000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அதேசமயம் மார்ச் மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பணியிடத்திற்கான முதன்மை எழுத்துத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே 6, 7 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த எழுத்து தேர்வு மே மாதம் ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிசி தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை காணலாம் என்று தெரிவித்துள்ளது
Comments
Post a Comment