கண்டிப்பது உங்கள் நல்லதுக்கு தான்..ஆசியர்களை மரியாதையுடன் நடத்துங்கள்.. மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை..
ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது மாணவர்களின் நலனுக்காகவே என்று தெரிவித்த அமைச்சர், ஆசிரியர்களை மாணவர்கள் அனைவரும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியான ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படும். அந்த வகையில் சேலம் மணடலத்துக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
மண்டல ஆலோசனை கூட்டம்:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது மாணவர்களின் நலனுக்காக தான். எனவே ஆசிரியர்களை மாணவர்கள் அனைவரும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார். மேலும் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணிபுரிய தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரிவித்த அமைச்சர், மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றார்.
மாணவர்களுக்கு மன எழுச்சி கையேடு :
மேலும் கொரனோவின் போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிட்டது எனவும் வளர் பருவத்தினருக்கான மன எழுச்சி கையேடு வழங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக, சேலம் மாவட்டத்துக்கும் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மேற்பார்வையில் இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டனர்.
கற்றல் மற்றும் கற்பித்தல் திறன்:
மேலும் சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் முறை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேற்று ஆய்வுமேற்கொண்டார். அவர்களுடன் சேலம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட இணை இயக்குனர்களும் ஆய்வில் ஈடுப்பட்டனர். இதனிடயே சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி,தருமபுரி,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Comments
Post a Comment