ஆசிரியர் நியமன தேர்வு ரத்து செய்ய போராட்டம்
ஆசிரியர் தகுதி தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வேறு போட்டி தேர்வுகள் இல்லாமல், நேரடியாக பணி நியமனம் வழங்கக்கோரி, பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில், இதுவரை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இந்நிலையில், எதிர்காலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நியமன தேர்வு என்ற போட்டி தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண்கள் அடிப்படையில், ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கம் சார்பில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று முதல் தொடர் உண்ணாவிரதம் துவங்கப்பட்டுள்ளது. நுாற்றுக்கணக்கான பட்டதாரிகள் பங்கேற்று உள்ளனர். ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி தேர்வுக்கான அரசாணை, அ.தி.மு.க., ஆட்சியின் போது பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி, போட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment