மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: கற்றல், கற்பித்தல் பணிகள் தொய்வு




கோவை:கோவை மாநகராட்சி பள்ளிகளில், 90 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கற்றல், கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 17 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலை, 13 நடுநிலை, 42 ஆரம்பப்பள்ளிகள் உட்பட, 83பள்ளிகள் செயல்படுகின்றன.


தற்போது, 850 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில், 90 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஆசிரியர் பற்றாக்குறையால் பணிச்சுமை அதிகரிப்பதுடன் கற்றல், கற்பித்தல் பணிகளும் பாதிக்கப்படுகிறது. பல பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறையும் இருப்பதாக, அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், போதுமான ஆசிரியர்கள் இல்லை.


குறிப்பாக, ஆரம்பப்பள்ளிகளில் அதிகப்படியான காலியிடம் உள்ளது.பல மாணவர்களுக்கு அடிப்படை எழுத்து, வாசிப்பே தெரியவில்லை என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணிச்சுமை காரணமாக, தனிக்கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. 


பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்து வரும் கலந்தாய்வு முழுமை பெற்றால் மட்டுமே உரிய முடிவுகளை அலுவலர்களால் மேற்கொள்ள முடியும் என்பதே உண்மை. தேர்வுகள் நெருங்குவதால், பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து, ஆசிரியர்கள் தரப்பில் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

Comments

Popular posts from this blog