போட்டி தேர்வுக்காக 5 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நுாலகம்
போட்டி தேர்வுகளுக்கு ஆயத்தமானவர்கள் படிப்பதற்கு வசதியாக விருதுநகர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நுாலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக , ''மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆர்.சாந்தா கூறினார்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பணிகள் தொழில் நெறி வழிகாட்டி மையத்தில் வேலை வாய்ப்பு பதிவு, புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்குவது, போட்டு தேர்வுகளுக்கு ஆயத்தமாபவர்களுக்கு பயிற்சி வழங்குவது, வேலை வாய்ப்பு முகாம் நடத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 92,508 ஆண்,1, 05,506 பெண் என 1,97,914 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.யார், யாருக்கு உதவித் தொகை10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு முடித்து பள்ளி கல்லுாரி நேரடியாக தொடராமல் டுட்டோரியல், தொலைதுார கல்வி முறையில் பயிலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு கடந்த 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. 10 ம் வகுப்பு முடித்து பதிவு செய்த மாற்று திறனாளிகளுக்கு 1 ஆண்டுக்கு பின் 10 ஆண்டுகளுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.போட்டி தேர்வு பயிற்சிக்கான வசதிகள் தொழில் நெறி மையம் மூலம் தன்னார்வ பயிலும் வட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.போட்டி தேர்வுகளுக்கு ஆயத்தமானவர்கள் படிப்பதற்கு 5 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நுாலக வசதி உள்ளது. இங்கு வரும் மாணவர்கள், இளைஞர்கள் விருப்பப்பட்ட பாட புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து கொள்ளலாம். மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு, 100 பேர் அமர கூடிய அளவில் வகுப்பறைகளும் உள்ளது. இதில் பிரத்யேகமாக ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்.
மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை மாதிரி தேர்வு நடத்துகிறோம். இதில் சேர்வதற்கு வயது தகுதி எதும் இல்லை. பயிற்சி முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது.வேலை வாய்ப்பு முகாம் மூலம் அரசு பணிக்கு பாதிப்பு வருமாவாரம் தோறும் வெள்ளிக் கிழமை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளிவிலான வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறோம். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தும் முகாம் மூலம் பணிக்கு சேர்ந்தால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதன் பதிவு மூப்பு பாதிக்கப்படும் என்றோ, அரசு வேலை வாய்ப்பு பறி போகும் என்றோ மக்கள் கருதுகின்றனர்.
வேலை வாய்ப்பு முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் பணிக்கு சேருவதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. 3 மாதங்களுக்கு ஒரு முறை பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறோம். தனியார் வேலை வாய்ப்புகளுக்காக www.tnprivatejobs.tn.gov.in வலைதள வசதி உள்ளது.இதில் விருதுநகர் மாவட்டத்தில் 73 தனியார் நிறுவனங்கள் உள்ளன. இந்த வலைதளத்தை வேலை தேடுபவர்களும் தங்கள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேடுபவர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.எந்நிலையில் உள்ளது வேலை வாயப்பு விழிப்புணர்வு வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு செய்ய, புதுப்பிக்க வரும் அனைவருக்கும் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து தினசரி விழிப்புணர்வு கொடுக்கிறோம்.பயிற்சி மையத்தில் படித்து அரசு வேலையில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் மூலம் அரசு தேர்வுகளுக்கு தயாராகிவரும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறோம். முன்னாள் மாணவர்கள் மூலம், அரசு பணியில் இணைவதற்கு பணம் கொடுக்க தேவையில்லை என்பது குறித்து பள்ளி கல்லுாரிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அரசு பணி தேர்வுகளுக்கு ஆயத்தமானவர்களை வாட்ஸ் ஆப் குழுவாக ஒருங்கிணைத்து அரசு தேர்வு குறித்த அறிவிப்புகளை தெரியப்படுத்துகிறோம். பயிற்சி கையேடுகளும் அளிக்கிறோம்,என்றார்.
Comments
Post a Comment