'குரூப் 4' தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்
குரூப் 4' தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியது. வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர் உட்பட, ஏழு வகை பதவிகளில், 7,301 காலியிடங்களை நிரப்ப, ஜூலை 24ல், குரூப் 4 தேர்வு நடக்கிறது.
இதற்கான, 'ஆன்லைன்' வழி விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.
ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்.இந்த தேர்வில் பங்கேற்க, வரும் ஜூலை 1ல் குறைந்த பட்சம், 21 வயது முடிந்திருக்க வேண்டும்; 60 வயது வயதுள்ளவர்கள் வரை எழுதலாம். கல்வி தகுதியை பொறுத்தவரை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை உதவியாளர் பணிக்கு, பிளஸ் 2; மற்ற பதவிகளுக்கு குறைந்தபட்சம், 10ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர் பணிக்கு, தட்டச்சு முதுநிலையும்; சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து முதுநிலையும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எழுத்து தேர்வு முடிவுகள், அக்டோபரில் வெளியிடப்படும். சான்றிதழ் பதிவேற்றம் அக்டோபரிலும், சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங், நவம்பரிலும் நடைபெறும். கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment