சத்துணவு அமைப்பாளர், சமையலர் 35 ஆயிரம் பணியிடங்கள் காலி
தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் சத்துணவு காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பாண்டி தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்திருப்பதாவது: 1982 ல் சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது.
சத்துணவு ஊழியர்கள் சங்கம் 1985 தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர் சம்பளம் 150 ரூபாய் என்பது இன்று 7500 ரூபாய் ஆகவும், சமையலர் 60 ரூபாய் என்பது 7300 ரூபாயாகவும், உதவியாளருக்கு 30 ரூபாய் என்பது 5900 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.பணி ஓய்வு பெறும் அமைப்பாளர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இது பல்வேறு போராட்டங்களால் கிடைத்துள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தப்பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.முழுமையான காப்பீட்டு திட்டம், தேர்தல் காலத்தில் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன் வர வேண்டும். தமிழகத்தில் காலியாகவுள்ள 35 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment