அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உபரி பேராசிரியர்கள் பணிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு: உயர்கல்வித்துறை உத்தரவு




அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பேராசிரியர்கள் பணி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், மாணவர் எண்ணிக்கைக்கு தேவையானவர்களை விட, அதிக அளவிலான துணை பேராசிரியர்கள் பணியில் இருந்தனர். இதையடுத்து உபரியாக இருந்த 370 துணை பேராசிரியர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக நிதிநிலை சரியில்லாததால், மாற்றப்பட்ட 370 உபரி துணை பேராசிரியர்களை, தற்போது மீண்டும் திரும்பப்பெற முடியாது என்று உயர்கல்வித்துறைக்கு, அண்ணாமலை பல்கலைக்கழகம் கடிதம் எழுதியிருந்தது.


இந்நிலையில் பிற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 370 உபரி பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகாலம் பணி நீட்டிப்பு வழங்கி உயர்கல்வி துறை ஆணையிட்டுள்ளது.


அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து ஏற்கனவே 4 ஆண்டுகால டெபுடேஷனில் பிற உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட 370 துணை பேராசிரியர்களும், தற்போது பணியாற்றி வரும் பிற கல்லூரிகளிலேயே அடுத்த 3 ஆண்டு காலத்துக்கும் பணியாற்றிட வேண்டும்.இதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்லூரிக்கல்வி இயக்குநரகம் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog